Saturday, October 30, 2004

பல்லவியும் சரணமும் - V

இன்னும் சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், திரைப்படத்தையும் கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே! 'பழைய பாடல் Blogger புலிகள்' தான் பல உலவுகின்றனவே!

'kudigaaranin uLaRaLgaL' வலைப்பதிவுக்குச் சொந்தக்காரர் மற்றும் Icarus Prakash ஆகியோருக்கு இப்போட்டியில் கலந்து கொள்ள அனுமதி இல்லை :-))

1. வள்ளியென்றால் வேலவனோடு, மன்னவனே நான் என்றும் உன்னோடு!
2. உன் மனமெங்கும் தெருக்கூத்து பகல் வேஷம் ...
3. கன்னி உன்னை கண்டதாலோ, தன்னை எண்ணி ...
4. சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ?
5. தேனிலூறிய மொழியில் மொழியில் மலரும் மலரும் பூ மலரும்!
6. ஈன்ற தாயை நான் கண்டதில்லை, எனது தெய்வம் வேறெங்கும் ...
7. நேற்றொரு தோற்றம் இன்றொரு மாற்றம் பார்த்தால் பார்வைக்கு ...
8. உனக்கேற்ற துணையாக எனை மாற்றவா, குல விளக்காக ...

என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!

என்றென்றும் அன்புடன்
பாலா

4 மறுமொழிகள்:

Chandravathanaa said...
This comment has been removed by a blog administrator.
Chandravathanaa said...

1. வள்ளியென்றால் வேலவனோடு, மன்னவனே நான் என்றும் உன்னோடு!

பல்லவி- நீயேதான் எனக்கு மணவாட்டி
நான் கை பிடிக்கக் காத்திருக்கும் சீமாட்டி...

திரைப்படம் - "குடியிருந்த கோயில்"

2. உன் மனமெங்கும் தெருக்கூத்து பகல் வேஷம் ...

பல்லவி - தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு

திரைப்படம் - அவளொரு கொடர்கதை

3. கன்னி உன்னை கண்டதாலோ, தன்னை எண்ணி ...

பல்லவி- இயற்கை என்னும் இளையகன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி..

திரைப்படம் - "சாந்திநிலையம்"

4. சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ?

பல்லவி - தங்கத்திலே ஒரு குறைவிருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ
உங்கள் அங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் அன்பு குறைவதுண்டோ

திரைப்படம் - பாகப்பிரிவினை

5. தேனிலூறிய மொழியில் மொழியில் மலரும் மலரும் பூ மலரும்!

பூயைக்கு வந்த மலரே வா.
திரைப்படம் - பாதகாணிக்கை ை

6. ஈன்ற தாயை நான் கண்டதில்லை, எனது தெய்வம் வேறெங்கும் ...

பல்லவி - பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பவள வாயில் புன்னகை சிந்தி
கோலமயில் போல் நீ வருவாயே
கொஞ்சும் கிளியே அமைதி கொள்வாயn

திரைப்படம் - பாலும் பழமும்

7. நேற்றொரு தோற்றம் இன்றொரு மாற்றம் பார்த்தால் பார்வைக்கு ...

பல்லவி - நானொரு குழந்தை நீயொரு குழந்தை
ஒருவர் மடியிலே ஒருவரடி...

திரைப்படம் - படகோட்டி

8. உனக்கேற்ற துணையாக எனை மாற்றவா, குல விளக்காக ...

பல்லவி - காதோடுதான் நான் பாடுவேன்
திரைப்படம் - வெள்ளி விழா

enRenRum-anbudan.BALA said...

சந்திரவதனா,
அத்தனையும் சரியாகக் கூறி 100/100 வாங்கி விட்டீர்கள்! நீங்கள் பழைய நல்ல பாடல்களின் ஆர்வலர் என்பதையும் அறிந்து கொண்டேன்.

முதல் பாடலின் பல்லவியில் ஒரு சிறு திருத்தம்!
"நீயே தான் எனக்கு மணவாட்டி, என்னை காதலித்துக் கைபிடிக்கும் சீமாட்டி!" என்பதே சரியென எண்ணுகிறேன்.

என்றென்றும் அன்புடன்
பாலா

Chandravathanaa said...

nantri Bala

natpudan
chandravathanaa

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails